தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்த அனுமதியளிக்கப் போவதில்லை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் அதனை தடுக்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தேச சட்ட மூலம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை திருத்திக் கொண்டு விரைவில் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அவசியத்தை ஜே.வி.பி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.