ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என அமைச்சரும் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர்களில் ஒருவருமான ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கூட்டு எதிர்க்கட்சியினால் கடந்த வாரம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியினையோ கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையோ விமர்சனம் செய்யவில்லை.
எனவே கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.