பிரசெல்ஸ் தாக்குதலை மையமாககொண்டு வீடியோ வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

327
பிரசெல்ஸ் நகரில் தாக்குதலை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் அதற்கு பொறுப்பேற்கும் விதமாக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் கடந்த 22ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நிழ்த்திய 3 தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியாகினர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். உலகளவில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் மையமாக வைத்து ஐ.எஸ். அமைப்பினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

”நாடுகடந்த இஸ்லாம் மற்றும் பிரசெல்ஸ் தாக்குதல்” என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவம் ஈராக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பலரை கொல்லப்படுகின்றனர். புராதான கட்டிடங்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகவும் பிரசெல்ஸ் தாக்குதலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் நெருப்பில் எரிவது போன்றும் அதில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நவின முறையில் எடிட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது புதிய பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

SHARE