கென்யாவின் ”போட்டோஷாப்” பெண்ணுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

284
சுற்றுலா சென்றது போன்று தனது புகைப்படத்தை போட்டோஷாப் செய்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

கென்யாவை சேர்ந்தவர் செவிலின் காட் (Sevelyn Gat). நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரான இவருக்கு உலகை சுற்றிப்பார்க்க வேண்டும் என்பது பெரிய ஆசையாக இருந்துள்ளது.

எனினும் அதற்காக வசதி தன்னிடம் இல்லையே அவர் கவலையடைந்துள்ளார். இந்நிலையில் தனது தோழி ஒருவர் மூலம் ஓரளவு போட்டோஷாப் கற்றுள்ளார்.

இதையடுத்து சீனாவின் புகழ்பெற்ற இடங்களுக்கு சென்றது போன்று தனது புகைப்படத்தை போட்டோஷாப் செய்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

மேலும் சீனாவில் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், சீனாவில் இருந்து திரும்பவுள்ளேன் போன்ற வாசகங்களையும் அதனுடன் இணைத்துள்ளார்.

அவரது இந்த புகைப்படங்களை பலரும் முதலில் கேலி செய்தாலும் பின்னர் விரும்பி சேர் செய்துள்ளனர்.

இதனால் இந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. இந்நிலையில் நைரோபியை சேந்த தொழிலதிபர் ஒருவர் இந்த புகைப்படங்களை பார்த்துள்ளார்.

இதையடுத்து செவிலினுக்கு உதவ முடிவு செய்த அவர் அதற்கான பணத்தை சேகரித்துள்ளார்.

இதன் மூலம் செவிலின் நிஜமாகவே தான் ஆசைப்பட்ட இடங்களை சென்று சுற்றிப்பார்க்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் வேறு இடங்களுக்கு சென்றால் எப்படி இருப்பார் என டுவிட்டர் பயனாளிகள் புகைப்படங்களை போட்டோஷாக் செய்து பதிவேற்றி வருகின்றனர்.

 

SHARE