220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல

247

மிக முக்கியமான 220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற நிதி அமைச்சரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஓய்வு பெற்ற சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு குறித்த பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் உயர் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்�

ஆவணங்கள் தொலைந்து போக எவ்வித காரணங்களும் கிடையாது.

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள் பற்றிய ஆவணங்கள் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்காது.

வெளிவிவகார வள திணைக்களம், திறைசேரி கட்டுப்பாட்டுத் திணைக்களம், சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற இடங்களில் இந்த ஆவணங்களின் பிரதிகள் பேணப்பட்டிருக்கும்.

இவ்வாறு அனைத்து இடங்களிலும் இந்த நிதி அறிக்கைகள் காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை என முன்னாள் சிரேஸ்ட அரசாங்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள் குறித்த 220 ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE