
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் பிளவடைந்திருப்பதா அல்லது ஒன்றிணைந்து முன்நோக்கி நகர்வதா என்ற சவாலை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிசனில் நேற்று நடைபெற்ற கம்பன் விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
இங்கு இப்போது இசைக்கப்பட்ட தேசிய கீதத்தில் ஒரு தாய் மக்கள் நாமே என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க இந்த தேசிய கீதத்தை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாட முடியும் என கூறியிருந்தார்.
எனினும், இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அதனை விமர்சனம் செய்த பலர் சிங்கள கலாச்சாரத்தையோ, வரலாற்றையோ தெரிந்து கொண்டவர்கள் அல்ல.
தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டதன் ஊடாக குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள சிலர் முயற்சித்தனர்.
அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ஜனாதிபதி இதனைச் செய்தார்.
குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் பிளவடைந்த நாடு ஒன்றையா அல்லது இணைந்து நாட்டை முன்னேற்றும் நடவடிக்கையே தொடர்வது என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஒன்றாக இணைந்திருப்பதன் மூலம் நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.