மைத்திரியைச் சந்திக்கத் தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள்

245

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஆராயும் வகையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம் பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவிற்கு எதிராக கடந்த சனிக்கிழமை பத்தேகமவிலும், அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் சுசில் பிரேம ஜயந்திற்கு எதிராக மாவனெல்லவிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பாகவே ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவி ஒன்றை வழங்குமாறு அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஜோன் செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தாம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவிடம் இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கோட்டபாய ராஜபக்சவிற்கு உயர் பதவி வழங்க வேண்டும் என்ற தனது கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளதாகவும் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.slfp

SHARE