
அவ்வாறு அவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டால், தாஜுடீன் கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகிய முக்கிய பல விசாரணைகளுக்கு தடை ஏற்படலாம் என பொலிஸார் மட்டத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்.எம்.விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக நீண்ட காலம் செயற்பட்டுள்ள நிலையில், அவர் ராஜபக்ச குடும்பத்தின் நெருக்கமான ஒருவராகும். அத்துடன் ராஜபக்சர்களின் உறவினர் என அறிந்து கொள்ள முடிந்துள்ளது.
இவர் கடந்த காலங்களில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட சந்தர்ப்பங்களில் தாஜுடீன் கொலை மற்றும் பிரகீத் காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணைகள் தொடர்பில் தற்போதைக்கு வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் அப்போதைய காலப்பகுதியில் செயற்பட்ட நபர்கள் மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் இந்த கொலைகள், தாக்குதல்கள் மற்றும் காணாமல் போக செய்தமைக்கு தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலைமையினுள் அவர் பொலிஸ் பிரதானியாக நியமிக்கப்பட்டு குறித்த விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்தலாம் என்பது பொலிஸ் அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
தற்போது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக மூன்று பெயர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்.எம்.விக்ரமசிங்க பெயருடன், பூஜித் ஜயசுந்தர மற்றும் சந்தன விக்ரமசிங்க ஆகியோரின் பெயர்களே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எம்.விக்ரமசிங்க பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவராகும். அத்துடன் தற்போதைய ஜனாதிபதியுடன் நல்ல நட்பை பேணி வருகின்றமையினால் குறித்த மூவரில் இவருக்கு குறித்த பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகளே அதிகமாக காணப்படுகின்றது.