இலங்கைக்கு ஒரு பில்லியன் பெறுமதியான தரமற்ற மருத்துவப் பொருட்கள்!- கோப்குழு

276

கடந்த ஐந்து வருடங்களில் ஒரு பில்லியன் ரூபாய்களுக்கும் மேற்பட்ட தரமற்ற மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவான கோப் இதனை கண்டறிந்துள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெந்தி தெரிவித்துள்ளார்.

குறித்த பொருட்கள் தரம் குறைந்த பொருட்கள் என்று இலங்கை மருந்தாக்கல் திணைக்களம் இறக்குமதி செய்யப்பட்ட பின்னரே தெரிந்துகொண்டமையானது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இதில் தொடர்புடைய அதிகாரிகளை கோப் குழு அழைத்து விசாரணை செய்யும் என்றும் ஹந்துன்நெந்தி தெரிவித்துள்ளார்.

SHARE