இலங்கை மீண்டும் தோல்வி: வெற்றியோடு வெளியேறியது தென்ஆப்பிரிக்கா (வீடியோ இணைப்பு)

309
உலகக்கிண்ண டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்கள் சந்திமலும் (21), டில்ஷனும் (36) அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள்.

ஆனால் அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

19.3 ஓவரில் இலங்கை அணி 10 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், கைல் அபாட், ஆரோன் பாங்கிசோ, பெகர்டீன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

121 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அம்லா நல்ல தொடக்கம் கொடுத்தார்.

அவர் 52 பந்துகளில் 56 ஓட்டங்களை குவித்து அதிரடி காட்டினார்.

தொடர்ந்து டுபிளசி 31 ஓட்டங்களுடனும் டிவில்லியர்ஸ் 20 ஓட்டங்களும் குவித்து அணியின் வெற்றிக்கு இட்டுச்சென்றுள்ளனர்.

இலங்கை அணி சார்பில் லக்மால் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 17.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

SHARE