இன்று முதல் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

306
080606132842-large
இந்த வருடத்தில் பருவ மழைக் காலம் வந்துவிட்டது, மழை வருவதற்கு முன்பாகவே டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திட்டத்திற்காக இந்த வாரத்தினை நுளம்பு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதாக காதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன் 12,569 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் மேல் மாகாணத்தில் மட்டும் 51.71 வீதமானோர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம், ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணியினர், முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து இந்த டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

SHARE