லங்காபுத்ர வங்கி தொடர்பாக விசாரணை

262

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோப் குழுவினால் அரச நிறுவன அபிவிருத்தி அமைச்சுக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தனவினால் குறித்த வங்கிக்கு பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் 62 பேர் அடிப்படை தகுதிகளின்றி தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கோப் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன் லங்காபுத்ர வங்கியின் தலைவர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப வங்கிக் கடன்களை வழங்குவதோடு, மிகவும் குறைந்த வட்டி விகிதங்களில் வழங்குவதாகவும் குறிப்பிட்டு இது தொடர்பாக உடனடியாக விசாரணை செய்யுமாறு கோரியே கோப் குழு அரச நிறுவன அபிவிருத்தி அமைச்சுக்கு பரிந்துரை  செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE