மடுப் பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணியில் மண் அகழ்வு

262
மன்னார் மடு பிரதேசத்துக்கு உட்பட்ட தம்பனைக்குளப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டச்செய்கைக்குரிய காணிகளில் சட்ட விரோதமாக மண் அகழ்வதாக குற்றஞ்சாட்டபப்ட்ட நிலையில் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்  இ.சாள்ஸ் நிர்மலநாதன் அப்பகுதிக்கு விஜயம்  செய்தார்.

இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கூறியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இப் பகுதிக்கு சென்றிருந்த பொழுது, உரிய இடத்தில் டிப்பர் வாகனம் ஒன்று மணல் ஏற்றிக்கொண்டிருந்த நிலையில் அவதானிக்கப்படது.

இதனை தொடர்ந்து அருகிலுள்ள தம்பனைக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு உரிய இடத்துக்கு அழைத்து உரிய வாகனத்தை சோதனையிட்டபோது இப்பகுதியில் எவ்வித அனுமதியுமின்றி மண்ணகழ்வு மேற்கொண்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆவணசெய்யுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிகளை  பாரளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இவ்விடத்திற்கிற்கு மன்னார் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.மடவல்ல வருகைதந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE