மகளின் புகைப்படத்தை பயன்படுத்தியமைக்காக கோபமடைந்த ஜனாதிபதி

274
 கடந்த 27ஆம் திகதி பொலன்னறுவை மனம்பிட்டிய நிஷ்ஷங்கமல்ல பாடசாலையில்யில் பொலிஸ் நடமாடும் சேவை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசார கையேடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேனவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தமை தொடர்பில் ஜனாதிபதி கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி, இவ்வாறான நடவடிக்கைகளுக்காக தனது குடும்பத்தினால் உதவி செய்த புகைப்படங்கள் அல்லது பெயர் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அரச கடமை நடவடிக்கைகளின் போது இவ்வாறானவை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் நடமாடு சேவை ஏற்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த கையேடுகளில் பொலிமா அதிபர் என்.கே.இலங்ககோன் அல்லது தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

SHARE