கடற்றொழில் அமைச்சிடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்கும் மீனவர்கள்

277

போர்ட் சிட்டி நிர்மாணிப்பால் தொழில் வாய்ப்பு இழந்த மீனவர்கள் அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.

போர்ட் சிட்டி நிர்மாண பணிகள் ஆரம்பித்த வேளை 3 இலட்சம் மீற்றர்கள் தூரத்திற்கு கடற்பிரதேசமானது மணல்களால் நிரப்பப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதன்காரணமாக மீன் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் மீனவர்கள் பலர் தொழில்வாய்ப்பை இழந்ததற்கு இதுவே காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மணல்களால் கடற்பிரதேசம் நிரப்பப்பட்டதால் பவளப்பாறைகள் அழிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பவளப் பாறைகளிலே மீன்கள் முட்டையிட்டு தனது இனத்தைப் பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆனால் மணல்கள் நிரப்பப்பட்டுள்ளதால் பவளப்பாறைகள் அழிந்துள்ளதோடு மீன்களின் இனப்பெருக்கமும் குறைவடைந்துள்ளதால் மீனவர்கள் தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட மீனவர்கள் தமக்கு 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE