கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்?

257

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கூட்டு எதிர்க்கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா காரியாலயத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு சுவிட்சர்லாந்து பொலிஸாரின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE