முன்னாள் போராளிகள் எழுவர் விடுவிப்பு!

251

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர், நேற்று அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் முன்னாள் போராளிகள் 46 பேர் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில், அவர்களில் 7 பேர், நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏனைய 39 பேரும் தொடர்ந்து புனர்வாழ்வு பெற்று வருகின்ற நிலையில், அவர்களில் பெண்ணொருவரும் அடங்குகின்றார். பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி கேணல் ஏ.ஆர்.ஹெமிடோன் தலைமையில், இவர்கள் எழுவரையும் விடுவிக்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE