அண்மைய நாட்களாக பெரும் பரபரப்புச் செய்தியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்யும் முயற்சியில் முன்னாள் போராளியாக இருந்த ஒருவர் தற்கொலை அங்கியுடன் அவரது 2வது மனைவியால் காட்டிக்கொடுக்கப்பட்டு புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரனை செய்யப்பட்டு வருகின்றார். இவ்விடயம் தொடர்பாக உண்மைத்தன்மை என்ன? தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என யுத்த வெற்றியினைக் கொண்டாடிய மஹிந்தவின் அரசு மறவன்புலவு என்னும் பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் என்பவற்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் வைத்து எட்வின் (வயது 31) என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் யாழ்ப்பாண வருகையினை முன்னிட்டு அவரைக் கொலை செய்வதற்கான முயற்சியாகவே இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் செயற்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தனது 13வது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டுள்ளார். இவருக்கு தற்போது 31 வயது. இவருக்கு புனவர்வாழ்வு அளிக்கப்படவில்லை. நிலைமைகள் இவ்வாறிருக்க தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டங்கள் சிறந்த நிலையினை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப்போராளிகள் மீண்டும் இந்நாட்டிற்குள் நுழைந்துவிட்டனர் என்பதனை வெளிப்படுத்துவதே இவ்வரசின் நோக்கமாகும். மஹிந்த ராஜபக்ஷவினை கொலைசெய்யவேண்டும் என இப்போராளி சிந்தித்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. மைத்திரிபால சிறிசேனவைக் கொல்வதற்கு அவர் ஏன் முனைப்புக் காட்டியிருக்கவேண்டும். மஹிந்த ராஜபக்ஷவினது அணியினர் இராணுவப்புலனாய்வில் செயற்படுகின்ற விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை வைத்து இவ்வாறானதொரு செயற்பாட்டினை மேற்கொண்டிருக்கலாம். இந்தப்போராளியினது இலக்கு ஏன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருக்கவேண்டும் என்பதில் பெரும் சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் எப்பாகத்திலாவது பிரச்சினைகள் உருவாகும்போது அது விடுதலைப்புலிகள் தான் என முத்திரை குத்துவது வழமையானது. விடுதலைப்புலிகள் மீண்டும் தாக்குதலை நடத்துவார்கள்தான். ஆனால் அது இவ்வாறல்ல. சரியான தருணத்தில் தமிழீழத்தை வென்றெடுப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பூச்சாண்டி காட்டவேண்டிய தேவை விடுதலைப்புலிகளுக்கு இல்லை.
புனர்வாழ்வு பெறாத போராளிகளைக் கைதுசெய்வதற்கான இவர்களது மாற்றுத்திட்டத்தினாலேயே மைத்திரிபால சிறிசேன மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்த இவர் திட்டமிட்டிருக்கலாம். தற்போது இவர்களுக்கு ஏற்றாற்போல் இச்சம்பவம் அமைந்துள்ளது. புனர்வாழ்வு பெறாத போராளிகளைக் கைதுசெய்யும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே மஹிந்த அரசின் காலத்தில் 11000 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறிருக்கும் நிலையில் மீண்டுமொரு இனக்கலவரத்தினை உருவாக்கும் நோக்கில் இவ்வரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறதா எனச் சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதன் பின்னணியில் தமது பாதுகாப்பு நிலைகளைப் பலப்படுத்துவதற்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்களுடைய நெறிப்படுத்தலின் கீழ் இவ்வாறான செயற்பாடுகள் இராஜதந்திர நகர்வுகளாக நகர்த்தப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
நெற்றிப்பொறியன்