சாவகச்சேரி சம்பவம்! தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம்!

255
sivajilinkam
சாவகச்சேரி, மறவன்புலவு தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்பு விடயம் அரசாங்கத்தினதும், அரசின் கீழ் உள்ளவர்களினதும் சதித் திட்டம் என்பதுடன், தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான நேற்று வியாழக்கிழமை தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

அங்கு மீட்கப்பட்ட பொருட்கள் சிங்கள பத்திரிகையினால் பொதி செய்யப்பட்டுள்ளன.

இதை தமிழ் மக்கள் மீது சுமத்தி, விடுதலைப் புலிகள் மீண்டெழுகின்றார்கள் என குற்றம் சாட்டி, தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகமே இது.

அத்துடன், எமது மக்கள் மீது இனவெறியினை தூண்டும் நோக்கத்துடன், இனவெறிச் செயலாக செய்கின்றார்கள் என்றே பார்க்க முடிகின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.

SHARE