டி20 உலகக்கிண்ண அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இந்திய அணித்தலைவர் டோனி, தான் மிகவும் கூலான அணித்தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.நேற்று நடைபெற்ற டி20 உலகக்கிண்ணத்தில் மேற்கிந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 196 ஓட்டங்கள் எடுத்தன் மூலம் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணித்தலைவர் டோனியிடம், நிருபர் ஒருவர் நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்ட டோனி, கொஞ்சம் எழுந்து வந்து என் பக்கத்தில் அமருங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்நிருபர் தயங்கவே, இது சற்று நகைச்சுவைதான் வாருங்கள் என்று கூறி தன் பக்கத்தில் அமரவைத்துக்கொண்டார். பின்னர் அவரை பார்த்து, நான் நன்றாக ஓடுகிறேனா? என்று கேட்கிறார், அதற்கு அவரும் நன்றாக ஓடுகிறீர்கள் என்று கூறுகிறார். பின்னர், 2018 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் உலகக்கிண்ண போட்டியில் நான் விளையாடுவேனா என்று கேட்கிறார். அதற்கு அந்நிருபரும் நிச்சயமாக விளையாடுவீர்கள் என்று கூறுகிறார். பிறகு என்ன, பதிலை தான் நீங்களே கூறிவிட்டீர்களே என்று கூறி சிரித்துள்ளார். சிரித்தபடியே, நிருபரை தட்டிக்கொடுத்து, அதுதான் பதிலை தான் நீங்களே கூறிவிட்டீர்களே என்று கூறியுள்ளார். |