கடத்தி நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் சிக்கியது

299

பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலொன்று தொடர்பில் தெரியவந்துள்ளது.

பணக்காரர்களை கடத்தி அவர்களை நிர்வாணப்படுத்தி , பெண்களை விட்டு படமெடுத்து அவற்றை பேஸ்புக்கில் இடப்போகின்றோம் , அல்லது வீட்டுக்கு அனுப்புவோம் எனக் கூறி கும்பல் செயற்பட்டு வந்துள்ளது.

இவர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்த நிலையில், வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இராணுவத்திலிருந்து தப்பித்து வந்த நபரின் மனைவியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மனைவிக்கும் தொடர்பிருப்பதாக தகவல்.

எனினும் அவர் தலைமறைவாகியுள்ளார்.

SHARE