முல்லை. புதுக்குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் உலாவும் மர்ம நபர்கள்

276
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார்சைக்கிளில் தினமும் இரவில் உலாவுவதாக அறியமுடிகின்றது.

புதுக்குடியிருப்பில் இருந்து குறித்த பிரதேசங்கள் நீண்ட தூரம் என்பதினால் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை தாமதமாக இருக்கின்றது. குறித்த மர்ம நபர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பயணிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் அண்மையில் வர்த்தக நிலையம் ஒன்று உடைத்து பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

stock-photo-5506028-dangerous-man-in-the-shadow

 

SHARE