குடியிருப்பு கட்டிடத்தின் கூரையை பெயர்த்து வீசிய புயல்

290
சீனாவில் ஹற்பின் பகுதியை தாக்கிய புயல் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கூரையை பெயர்த்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹற்பின் நகரை தாக்கிய கடும் புயல் அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மிகம் மோசமான வானிலை காரணமாக நகரின் பெருவாரியான பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி காணப்படுகிறது.

இதனிடையே காற்றின் வேகம் காரணமாக குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கூரை ஒன்று பெயர்த்து வீசப்பட்டுள்ளது.

குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து பெயர்ந்து விழுந்த கூரை தரை பதிக்கும் முன்னர் அருகாமையில் இருந்த பல கட்டிடங்களை பதம் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாலையின் அருகாமையில் இருந்த கட்டிடமாகையால் கூரை பெயர்ந்து விழுந்த போது அது வழியே சென்ற வாகனம் ஒன்று நொடியிடையில் தப்பியுள்ளது.

ஒரு நொடி தாமதித்து இருந்தால் பெயர்ந்து விழுந்த கூரையின் அடியில் அந்த வாகனம் சிக்கி விபத்துக்குள்ளாகியிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் பெயர்ந்து விழுந்த கூரையானது காற்றின் வேகம் காரணமாக தரையில் விழுந்து சுக்கலாக உடைந்து சிதறியதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

அதே தெருவில் மின்கம்பம் ஒன்று சரிந்து நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் மீது விழுந்ததில், அந்த வாகனம் தீ பிடித்து எரிந்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதியில் உடனடியாக தீயணைப்பு படையினர் வந்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

SHARE