இலங்கையின் தென்பகுதி கடற்பகுதியில் தொடர்ந்தும் கடற்படையினர் தமது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த புதன்கிழமையன்று குறித்த கடற்பகுதியில் 101 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகளை கைதுசெய்யும் வகையிலேயே இந்த தேடுதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அதனை கொண்டு வந்ததாக கூறப்படும் 10 ஈரானியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைதுசெய்யப்பட்டனர்.
ஏற்கனவே இவ்வாறான கடத்தல்களை மேற்கொண்டு இவர்கள், தென் அதிவேக பாதையின் ஊடாக தமது ஹெரோய்ன் விநியோகத்தை கொழும்புக்கு மேற்கொண்டு வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீனவர்கள் என்ற அடையாளத்துடனேயே இந்த ஹெரோயின் கடத்தல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.