தற்கொலை படை தாக்குதலால் சின்னாபின்னமான பிரஸெல்ஸ் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பெல்ஜியம் நாட்டின் பொலிஸ் கூட்டமைப்பு பிரஸெல்ஸ் விமான நிலைய நிர்வாகத்திடம் வைத்துள்ள கோரிக்கையில் பாதுகாப்பு அம்சங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் பாதுகாப்பை அதிகரிக்க செய்யவும் கோரியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 22 ஆம் திகதி தற்கொலை படை தாக்குதலை அடுத்து பிரஸெல்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக பெல்ஜியம் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்தோலாசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தின் ஒரு பகுதியை செயல்பாட்டுக்கு அனுமதிக்க முடிவு செய்தனர், ஆனால் இந்த முடிவு ஒட்டு மொத்தமாக 20% சேவையை மட்டுமே வழங்க முடியும் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள இந்த முடிவு மணிக்கு 800 பயணிகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என விமான நிலைய முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் அரசின் இந்த முடிவிற்கு பொலிஸ் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மட்டுமின்றி பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஐ.எஸ்.அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் 50க்கும் அதிகமானோர் விமான நிலைய ஊழியர்களாக இருப்பதையும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட இருவரின் குடும்ப உறுப்பினர்கள் பிரஸெல்ஸ் விமான நிலையத்தில் ஊழியகர்களாக செயல்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் தாக்குதலை கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. |