மஹிந்தவின் கோவணத்தை உருவிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மைத்திரியின் கோவணத்தையும் உருவுவார்கள்

291

 

மஹிந்தவின் கோவணத்தை உருவிய முஸ்லீம் அரசியல்வாதிகள் மைத்திரியின் கோவணத்தையும் உருவுவார்கள்

இலங்கைத் திருநாட்டில் சமாதானம் நிலவியுள்ள இந்தக் காலகட்டத்தில் தமக்கான தனி அரசியல் அலகு வேண்டும் என்று முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படுகின்ற விதமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குட்டிச்சுவராக்கிவிட்டு இன்று மைத்திரி-ரணிலை குட்டிச்சுவராக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். உலகத்தில் வாழ்கின்ற முஸ்லீம்களையும் இணைத்து தாம் 160 கோடி எனக் கொக்கரிக்கும் இந்த முஸ்லீம் அரசியல்வாதகிள் இந்த நாட்டில் நன்மை பெறும் வகையில் தமிழினத்திற்கு என்ன செய்தார்கள்? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டதைப்போன்று, பையுடன் வந்த முஸ்லீம்கள் இன்று அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். சமுதாயத்தில் அவர்களுக்கும் ஒரு அந்தஸ்து வேண்டும் என்று அவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாகக் குறிப்பிட்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, எனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சூத்திரதாரிகளாக இவர்கள் செயற்பட்டமை கவலைக்குரிய விடயம்தான் என்கிறார்.

14026_10152384026851467_8919753075655457165_n DSC_8345 hakkem-and-mahinda Eelamurazu 227-1_Eelamurazu 227.qxd Muslim-Ministers page1mahinda

UNP அரசினைப் பொறுத்தவரை வர்த்தகத்திற்காக தனது கைக்கூலியாக அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லீம் இனத்தினைப் பயன்படுத்துகிறது. முஸ்லீம் சமுதாயத்தினரை எடுத்துக்கொண்டால் மறைந்த அஷ்ரப் அவர்களைப்போன்ற சிறந்த குணம் படைத்த முஸ்லீம் அரசியல்வாதிகள் தற்போது இல்லை என்றுதான் கூறவேண்டும். நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல தமிழினத்திற்கு எதிராக முஸ்லீம்கள் செய்த இனவெறிக்கொலைகள் தொடர்பிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றைக்கூறி இனவாதத்தைத் தூண்டுவது எமது நோக்கமல்ல. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை தாம் சுவீகரித்துக்கொள்ளவேண்டும் என முஸ்லீம் தரப்பினர் துரிதமாக செயற்படுகின்றனர். முஸ்லீம் மக்கள் கிழக்கில் செறிந்துவாழ்கின்றனர் என்பது பிரச்சினையல்ல. அவர்களின் சனத்தொகைக்கேற்ப நிலப்பகுதி அவர்களுக்கு வேண்டும். அதனை அரசு வழங்கவேண்டும். ஆனால் தமிழ்த்தேசியம், த.தே.கூட்டமைப்பு, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தமக்கான தனி அலகினைக்கோரி இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

maithiripala sirisena

கிழக்கு மாகாண த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அமீர் அலி அவர்கள் தெரிவித்திருக்கும் விடயங்கள் ஒரு நாகரீகமான பேச்சு அல்ல என்றே கூறவேண்டும். த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்கள் புள்ளிவிபரங்களை அறியாமல் கருத்துத் தெரிவித்திருப்பது தவறு என்றே கூறவேண்டும். பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்ற சொற்பதம் இவர்களை கொதித்தெழ வைத்துள்ளது. பண உதவிகளை அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்; வழங்குவார்கள். அது மதம் மாற்றும் அடிப்படையில் அல்ல. இந்தக் காலகட்டத்தில் பணத்தினைக் கொடுத்தால் யார் தான் வாங்கமாட்டார்கள். இது இவ்வாறிருக்க, மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் மைத்திரிபால அவர்களை வைத்து தமது இலக்கான தனி அலகினைப்பெற முஸ்லீம் தலைவர்கள் மும்முரமாகச் செயற்பட்டுவருகிறார்கள். இனியொரு யுத்தம் இங்கு இடம்பெறுமாகவிருந்தால் தமிழ்-முஸ்லீம் இனங்களே சண்டைபிடித்துக்கொள்ளும். தமிழினம் கடந்த 60வருடங்களாக அயுதம், அஹிம்சை எனப்போராடி பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழத்தை, தமிழினத்துடன் இணைந்து குளிர்காய்ந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் பெற்றுக்கொள்ள எண்ணுவது தவறு.

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கடும்போக்கு உணரப்படுகிறது. பொதுபலசேனா என்ற பௌத்த அமைப்பு முஸ்லீம் இனத்தினை ஓரங்கட்ட எண்ணியதன் காரணம் என்ன? இதற்குள் பல்வேறான முரண்பாடுகள் இருக்கின்றன. இலங்கை அரசியல் வரலாற்றில் மீண்டுமொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அமையப்பெறுவது கவலைக்குரிய விடயம். இறுதியில் மைத்திரியின் கோவணத்தை உருவும் போதுதான் முஸ்லீம் அரசியல்வாதிகள் பற்றிய விழிப்புணர்வு இவ்வரசாங்கத்தினர் மத்தியில் ஏற்படுத்தப்படும்.
– நெற்றிப்பொறியன் –

SHARE