அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் திடீரென இலங்கை வந்த இவர், இன்று காலை முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்பில் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்புச் செயலர் கரணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.