கொழும்பில் ஹெரோயின் விநியோக மையம்

269
தென் பகுதி கடலில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் தொகை, தெற்கு அதிவேக வீதி வழியாக கொழும்புக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த ஹெரோயின் தொகையுடன் கடந்த 30 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

மிகப் பெரியளவிலான இந்த போதைப் பொருள் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர்களுடன் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் ஹெரோயின் இலங்கையின் தெற் பகுதி கடலில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவது போல், படகுகள் மூலம் நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதாக தெரியவந்துள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் ஊடாக கொழும்புக்கு கொண்டு வரப்படும் ஹெரோயின் கொழும்பில் வைத்து, பிரதான விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த ஹெரோயின் விற்பனையானது மிகப் பெரியளவில் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

957902448Untitled-1

SHARE