வாகனத்திலிருந்து தவறுதலாக விழுந்த சிறுவன் மரணம்

253
அநுராதபுரம் – ஹொரவபொதானை, மருதன்மடம் பகுதியில் டெக்டர் வாகனத்திற்கு அடியில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கப்புகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும், வாகனத்தில் இருந்து தவறுதலாக விழுந்ததினாலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையும், டெக்டர் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவபொதானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

download

SHARE