பிபிலை – உனகொல்லை பகுதியில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த 16 பேரும் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.