ஆனமடு – திவுல்வெவ பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகளுடன் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 64 வயதுடைய முதியவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிகள் இலங்கையில் தாயாரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாய வேலையின் போது விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே குறித்த துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக முதியவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.