அரச புலனாய்வு சேவைகளை வலுவிழக்க செய்யாது, சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்கள், முன்னாள் ஜனாதிபதியிடம் வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை மகிந்த ராஜபக்ச உட்பட கூட்டு எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.