டிஜிட்டல் டீவி காட்சிப் பலகையொன்று தலையில் வீழ்ந்து படுகாயத்துக்குள்ளான நிலையில் யுவதியொருவர் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சிகிரிய பிரதேசத்தில் நடைபெறும் இளைஞர்களின் களியாட்ட நிகழ்வான யொவுன்புர கொண்டாட்டங்களில் நாடெங்கிலும் இருந்து ஏராளமான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களின் இசை மற்றும் தகவல்தேடல் ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் யொவுன்புர களியாட்ட மைதானத்தில் டிஜிட்டல் டீவி பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரக்காப்பொலை பிரதேசத்தில் இருந்து யொவுன்புர கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 20 வயதான யுவதியொருவரின் தலையில் டிஜிட்டல் டீவி பலகையொன்று உடைந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக படுகாயங்களுக்குள்ளான குறித்த யுவதி தற்போது தம்புள்ளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.