அம்பாறை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வரகாபொலயில் நோயாளி தற்கொலை
கேகாலை – வரகாபொல ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 40 வயதுடைய நோயாளி ஒருவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வைத்தியசாலை ஊழியர் ஒருவர் இன்று அதிகாலை குறித்த நோயாளி இருந்த அறையை திறந்தபோதே அவர் இறந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரகாபொல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.