பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணியை கிண்டலடித்து டுவிட் போட்டுள்ளார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணியிடம் போராடி தோற்றது.
இந்திய அணியின் இந்த தோல்வியால் வங்கதேசம், பாகிஸ்தான் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வங்கதேச வீரர் முஸ்பிகர் ரஹீம் டுவிட்டரில் வெளிப்படையாகவே தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பின்னர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து பாலிவுட் வந்து பின்னர் தொழில் அதிபரை திருமணம் செய்து துபாயில் குடியேறியுள்ள நடிகை வீணா மாலிக் இந்திய அணியை கிண்டல் செய்து டுவிட் போட்டுள்ளார். அவர் கூறுகையில், ’என்ன ஒரு போட்டி.. சாதித்து விட்டீர்கள் மேற்கிந்திய தீவுகள்.. டியர் இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து வரும் கருத்து என்னவென்றால்.. ”மோக்கா.. மோக்கா” ’ என்று கிண்டலடித்துள்ளார். |