ஏமாற்றத்திலும் கோஹ்லி படைத்த சாதனை

310
டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்தார்.டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

இதில் முதலில் களமிறங்கிய இந்தியா 2 விக்கெட் மட்டும் இழந்து 192 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கோஹ்லி (89) கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சவாலான இலக்கு என நினைத்த போது அந்த அணியின் ஜான்சன் சார்லஸ் (52), ரஸல் (43), சிம்மோன்ஸ் (82) ஆகியோர் அதிரடி காட்ட அந்த அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இந்திய அணிக்காக இந்த தொடர் முழுவதும் அசத்திய கோஹ்லிக்கும் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் கோஹ்லி 89 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் தனது 16வது சதத்தை பதிவு செய்தார்.

இதன் மூலம் சர்வதேச டி20 அரங்கில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் தலா 15 முறை இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

அதேபோல் இந்த ஆண்டு டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலிலும் கோஹ்லி (13 போட்டி, 625 ஓட்டங்கள்) முதலிடம் பிடித்தார்.

சபிர் ரஹ்மான் (16 போட்டி, 463 ஓட்டங்கள்), ரோஹித் சர்மா (16 போட்டி, 425 ஓட்டங்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

SHARE