டி20 உலகக்கிண்ண தொடரின் அரையிறுதியில் இந்தியாவை புரட்டியெடுத்தது பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் சிம்மன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.டி20 உலகக்கிண்ண தொடரில் மும்பையில் நடந்த 2வது அரையிறுதி ஆட்டத்தில் சிம்மன்ஸ் அதிரடி காட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்நிலையில் மும்பை மைதானத்தில் அதிரடி காட்ட ஐபிஎல் போட்டியே தனக்கு உதவியதாக சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 82 ஓட்டங்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற லென்டில் சிம்மன்ஸ் கூறுகையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை எனக்கு சொந்த மைதானம் போன்றது. இங்குள்ள சீதோஷ்ண நிலையை மிகச்சரியாக கணித்து செயல்பட்டேன். நான் சிறப்பாக விளையாடியதற்கு ஐ.பி.எல் அனுபவமே உதவிகரமாக இருந்தது. ஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிளட்சர் காயமடைந்ததும், நான் இந்தியாவுக்கு உடனடியாக புறப்பட்டு வந்தேன். சோர்வாக இருந்ததால் காலையில் சிறிது நேரம் பயிற்சி எடுத்து விட்டு, பகல் 12 முதல் 4 மணி வரை தூங்கினேன். நன்கு ஓய்வு எடுத்த பிறகே களம் இறங்கினேன்” என்று கூறியுள்ளார். |