நாட்டுக்கான விவசாயிகளின் முயற்சிகளை குறைத்து மதிப்பிட போவதில்லை – ஜனாதிபதி

268
விவசாயிகள் நாட்டுக்கு சோற்றை வழங்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்க எடுக்கும் முயற்சிகளை எந்த சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரசாயன பசளை பயன்படுத்துவதால், இழக்கப்படும் விவசாயிகளின் உயிர்களை பாதுப்பதற்காக இயற்கை கனிம பசளையை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.பொலன்நறுவை கல் விகாரை சூழலில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.ஆரம்ப காலத்தில் இயற்கை பசளைகளை பயன்படுத்தியே விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டனர். அந்த காலத்தில் அரசி உற்பத்தியில் நாட்டை தன்னிவைடை செய்ய முடிந்தது. நாட்டுக்கும் விவசாயிகளுக்கு நன்மையை கொடுக்கும் இயற்கை பசளை பயன்பாட்டை தடுக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.தமது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் துரோக தனமான எண்ணத்தில் அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

SHARE