மண்வாசனை என்ற டப்பிங் சீரியல் மூலம் தமிழக மக்களை கவர்ந்தவர் பிரதியூஷா. இவர் நேற்று காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொண்டார்.
ஆனால், இவருடைய நண்பர்களும், உறவினர்களும், அவள் மிகவும் தைரியமான பெண், ஒரு போது இந்த முடிவை எடுக்க மாட்டாள், இதில் ஏதோ மர்மம் உள்ளது என புகார் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரதியூஷாவின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ‘எனது மரணத்திற்கு பிறகும் கூட எனது முகத்தை உன்னை விட்டு திருப்ப மாட்டேன்’ என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர் தற்கொலை தான் செய்துக்கொண்டார் என கூறப்பட்டாலும், போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.