மாபொல உடற்பயிற்சி நடைபாதையை நான் உடைக்கவில்லை – ஜோன் அமரதுங்க

253
வத்தளை மாபொல உடற்பயிற்சி நடைபாதையை தாம் உடைக்கவில்லை என கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த பாதையை உடைத்தவர்களை நானும் தேடி வருகின்றேன். பாதையை உடைத்தவர்கள் பிடிபட்டால் அவர்களைக் கொண்டே பாதையை மீளவு அமைத்துக் கொடுப்பேன்.

பாதையை உடைக்குமாறு நான் கூறவில்லை. உண்மையில் அந்தப் பகுதியில் பாதையொன்றை அமைக்க நான் திட்டமிட்டிருந்தேன்.

எனினும், நடைபாதையை நான் உடைக்கவில்லை. நான் உடைக்காத பாதையை நான் எதற்காக செய்துகொடுக்க வேண்டும்.

எனது சொந்தப் பணத்தையோ அரசாங்கப் பணத்தைக்கொண்டு பாதையை அமைக்க வேண்டியதில்லை.

பாதையை நான் உடைக்காத காரணத்தினால் என்னிடம் பொலிஸார் விசாரணை நடத்தவில்லை. அதற்கான தேவையுமில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

JHONE-AMARATUNKA-5748547545

 

SHARE