இந்திய நிறுவனத்தின் வீடமைப்பு உடன்படிக்கை ரத்தாகவுள்ளது

275
இலங்கையில் வீடமைப்பு திட்டம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த இந்திய ஹைதராபாத் நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ரத்துச்செய்யப்படவுள்ளது. ஐவிஆர்சிஎல் என்ற இந்த நிறுவனத்தின் உடன்படிக்கையே ரத்துச்செய்யப்படவுள்ளது.

இந்த நிறுவனத்தினால் கொல்கத்தாவில் அமைக்கப்பட்ட மேம்பாலம் அண்மையில் உடைந்து வீழ்ந்து 24 பேர் அதில் பலியாகினர்.

இதனையடுத்து இலங்கையின் நகர அபிவிருத்தி சபை குறித்து நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யவுள்ளது.

குறித்த நிறுவனத்தினால் இலங்கையில் நாலாயிரம் வீடுகள் கட்டப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

8101096-Cancelled-stamp-Stock-Photo-cancel

SHARE