ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வடக்கில் தற்கொலை குண்டு அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் இரண்டு இடங்களில் மீட்ப்பட்டிருந்ததன.
இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டைகளை அதிகரிக்க பாதுகாப்புத் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
முப்படையினர், புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் கூட்டாக இணைந்து இந்த தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்துள்ளனர்.
விரிவான அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இரவு நேர ரோந்துப் பணிகளும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
சந்தேகத்திற்கு இடமான நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் அருகாமையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.