அம்பகமுவ பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

285

நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் 2016ம் ஆண்டிற்கான அம்பகமுவ பிரதேச கோரளை சபை செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 04.04.2016 அன்று அம்பகமுவ பிரதேச சபை செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான கே.கே.பியதாஸ மற்றும் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில்  இந்த குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உட்பட உதவி பிரதேச செயலகர் ஆர்.டி.பி.சுமன சேகர, மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்.ரமேஷ்வரன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், கணபதி கனகராஜ், சக்திவேல், சரஸ்வதி சிவகுரு, எம்.ராம், பிலிப்குமார் அடங்களாக பிரதேச பொலிஸ் நிலைய அதிகாரிகள், கிராம, வீதி போக்குவரத்துறையின் அரசாங்க அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன்போது 2015ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் பூரணப்படுத்தாத வேலைத்திட்டங்களும் 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடல் மற்றும் கருத்து தெரிவித்தல், குறைபாடுகள் நிவர்த்தித்தல் போன்றவை இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)

1a043b2b-cb44-4ce1-ab7d-9ed3e58429ea 8f0e6e76-4a92-4acf-9245-de179d125858 710ecbec-519d-4282-87e2-c34213789a70 80996505-2383-492d-a1af-f8a6190ec99c b84f2339-a801-4faf-ac98-6295bdfc34f1 ed929cc8-715e-4b48-97a5-46ecd8049ca2

SHARE