மகன் முன்னிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தந்தை

285
பிரேசிலில் பொலிஸ் அதிகாரியை, அவரது மகன் முன்னிலையில் திருடர்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.பிரேசிலின் Jardim Sao Luis மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியான Reginaldo Godoi Taiacoli என்பவர் தனது 14 வயது மகனுடன் காரில் வந்துகொண்டிருந்தபோது டயரில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால், எரிபொருள் நிரப்புமிடத்தில் காரினை நிறுத்தி அதனை சரிசெய்துகொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த 2 திருடர்கள் இவரது பையில் உள்ளவற்றை கொடுக்கும்படி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அருகில் நின்ற மகனிடம், கைகள மேலே உயர்த்திக்கொண்டு அமைதியாக நிற்கும்படி கட்டளையிட்டுள்ளனர்.

ஒரு திருடன், காரினை சோதனையிட்டுக்கொண்டிருக்க, மற்றொரு திருடன் பொலிசாரிடம் உள்ளவற்றை பறிமுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.

அப்போது நடைபெற்ற சண்டையில் அத்திருடன் பொலிசின் தலையில் துப்பாக்கியால் சுட்டவுடன், இதனை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் அச்சத்தில் அவ்விடத்தை விட்டு ஓடுகையில், துப்பாக்கி சத்தம் கேட்டு யாரும் அவ்விடத்திற்கு வந்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் திருடர்களும் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதில், பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகியுள்ளார், 30 வருடம் அனுபவம் வாய்ந்த பொலிஸ் அதிகாரியான இவர், மிகவும் திறமையானவர் என்றும் பிறருடன் சேர்ந்து பணியாற்றுவதில் சிறப்புமிக்கவர் என சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவரின் இறப்பால், குடும்பத்தினரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர், இந்த சம்பவம் குறித்த விசாரணையை பொலிஸ் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

SHARE