தாயாரை துடிதுடிக்க கொன்ற மகன்

308
ரஷ்ய நாட்டில் பெற்ற தாயை துடிதுடிக்க கொலை செய்த மகனுக்கு தண்டனை வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய கட்டுமான துறை கோடீஸ்வரரின் ஒரே மகன் Egor Sosin என்ற 19 வயது வாலிபர். இவர் தனது தாயாரான Anastasia Novikova-Sosina(44) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

கேளிக்கை விருந்துகளில் அதிகம் பங்கேற்றதால், வாலிபர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

மகனின் நிலையை பார்த்த தாய் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக்கொண்டு மத்திய ரஷ்யாவில் உள்ள Kazan நகருக்கு கடந்த டிசம்பர் அன்று சென்றுள்ளார்.

இதே நகரில் ஒரு நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இருவரும் தங்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால், மகனுக்கு சில மாத்திரைகளை அவர் கொடுத்துள்ளார்.

அப்போது, திடீரென வாலிபரின் எண்ணங்கள் மாறியுள்ளது. உடனே அருகில் இருந்த தொலைப்பேசி ஒயரை தனியாக துண்டித்து அந்த கம்பியால் தாயின் கழுத்தை இறுக்கியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத தாய் மகனிடமிருந்து தப்பிக்க முடியாமல் மூச்சடைத்து உயிரிழந்துள்ளார்.

தாய் இறந்ததும் அரை நிர்வாணத்துடன் வெளியே வந்த வாலிபர், அங்கும் இங்கும் நடந்துக்கொண்டு இருந்துள்ளார்.

ஹொட்டலில் நிகழ்ந்த இந்த கொலை விவகாரம் பொலிசாருக்கு தெரியவர, அவரை உடனடியாக கைது செய்தனர்.

வாலிபரை பலக்கட்டமாக சோதனை செய்ததில், இந்த கொலை நிகழ்ந்தபோது அவருக்கு சித்த பிரமை போல் காட்சிகள் தோன்றியதும், மிகவும் மனநிலை பாதிப்பு அடைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ‘குற்றம் சாட்டப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவருக்கு சிறை தண்டனை விதிக்க முடியாது என்றும், அவர் உடல்நலம் குணமடையும் வரை மருத்துவ பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும் எனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

SHARE