மனிதர்களில் அலர்ஜி ஏற்படுவதற்கு இப்படியும் ஒரு காரணம் உண்டு

287
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுள் அலர்ஜியும் ஒன்றாகும். இந் நோயானது உணவு வகைகளை உட்கொள்ளும் போதோ அல்லது சூழலின் தன்மைக்கு ஏற்பவோ ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.தற்போது அலர்ஜியானது ஒவ்வொருவரும் பிறக்கும் காலநிலையிலும் தங்கியுள்ளது என சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்யு ஒன்று எடுத்துக்காட்டுகின்றது.

அதாவது வசந்த காலம் அல்லது கோடை காலத்தில் பிறப்பவர்களை விட இலையுதிர் காலம் அல்லது குளிர் காலத்தில் பிறப்பவர்கள் அதிகளவில் அலர்ஜி தாக்கத்திற்கு உட்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூரிய ஒளி அற்ற காலப் பகுதிகளில் தோலிற்கு அவசியமான ஊட்டச் சத்தான விற்றமின் டி தொகுப்பு பாதிக்கப்படுவதனாலும் அலர்ஜி ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தவிர பரம்பரை இயல்புகளுக்கு பொறுப்பான DNA இலும் பிறக்கும் காலநிலை தாக்கம் செலுத்துவதாக குறித்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

SHARE