
விசாரணைக் குழுவினால் அடையாளம் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சம்வத்தின்போது பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து அந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக நிறுவன விதிக்கோவையின் பிரகாரம், பொலிஸார் ஒழுக்கம் மீறி செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்தார்.
இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (07) ஆணைக்குழு கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் படி சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோககத்தர்களிடம் விளக்கம் கோரப்படுவதுடன், அவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஒழுக்காற்று குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.