நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தோட்டபகுதியில் கெசல்கமுவ ஒயாவில் ஆணின் சடலம் ஒன்று 04.03.2016 அன்று மாலை மீட்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
70வயது மதிக்கதக்க இரண்டு பிள்ளைகனின் தந்தையான பழனியாண்டி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் தொடர்பாக அட்டன் நீதவான் விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)