யாழ்,கொடிகாமம் பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட 95 கிலோகிராம் கேரள கஞ்சாவை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்தும் நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள போதைப்பொருள் ஒழிப்புப் பணியக உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் பின்னரே யாழ்.கொடிகாமம் பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கஞ்சா மீட்பின் போது தப்பியோடிய சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.