ஹம்பாந்தோட்டை உப்பள தொழிலாளர்களின் போனஸ் தொகை ரத்து

272
ஹம்பாந்தோட்டை உப்பள தொழிலாளர்களின் போனஸ் கொடுப்பனவு ரத்துச் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உப்பள ஊழியர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் அரசாங்கத்துக்குச் சொந்தமான உப்பளம் ஒன்று அமைந்துள்ளது. இதில் சுமார் 500க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் முகாமைத்துவம் மாவட்ட அபிவிருத்திக்குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

வருடந்தோறும் இங்குள்ள ஊழியர்களுக்கு சித்திரைப் புத்தாண்டுக்கான போனஸ் கொடுப்பனவு வழங்கப்படுவது வழக்கமாகும்.

எனினும் இந்த ஆண்டு உப்பள ஊழியர்களின் புத்தாண்டு போனஸ் கொடுப்பனவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஊழியர்கள் பெரும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வருட ஆரம்பத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கட்டவுட்டுகளுக்காக உப்பளத்திலிருந்து பெரும் தொகைப் பணம் செலவிடப்பட்டதன் காரணமாகவே ஊழியர்களின் புத்தாண்டு போனஸ் கொடுப்பனவு ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

SHARE